”இந்தி திணிப்பை எந்தக் காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது” - அண்ணாமலை பதில்

”இந்தி திணிப்பை எந்தக் காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது” - அண்ணாமலை பதில்
”இந்தி திணிப்பை எந்தக் காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது” - அண்ணாமலை பதில்
Published on

இந்தி திணிப்பை எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தி பிரச்சனை அங்கங்கே பார்த்து வருகிறோம். இந்தி திணிப்பு எந்த காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது என்பதை தீர்க்கமாக சொல்கிறோம்.

2011-ல் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தி இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அலுவலக மொழி சட்டம் (official language act) அன்று சொல்லியது, எப்படி திமுக அமைதியாக இருந்தது. ஏ. ஆர்.ரகுமான் சொன்னது போல், தமிழ் இணைப்பு மொழியாக இருப்பது பெருமையே. ஆனால் அதை வளர்க்க என்ன செய்கிறோம் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

தமிழ் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதி, அங்க 10 பள்ளிகள் தமிழக அரசு நடத்த வேண்டும். அதை செய்தால் பாஜக அதை வரவேற்கும். முழு செலவையும் தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில் தான் படிக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை கொண்டு வந்துள்ளோம்.

நான் இந்தி பேச மாட்டேன். இந்தியை கட்டாயம் திணிக்க மாட்டோம். பாஜக அதை செய்யாது. அமித்ஷா மற்றும் மோடியும் அதை விரும்பவில்லை.

கேரளாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில், தமிழக முதல்வர் இந்திய பன்முக தன்மையை குலைப்பதாக பேசியுள்ளார். திட்டகுழுவுக்கு பதில் நிதி ஆயோக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் எந்த பன்முக தன்மை குறைந்துள்ளது என்று முதல்வர் சொல்கிறார் என்று தெரியவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு எத்தனை மாநிலத்தில் ஆட்சியை கலைத்தது என்று முதல்வர் சொல்ல வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com