இந்திரா காந்தி குறித்து பேசிய அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து செல்வப்பெருந்தை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “வாரிசு என்பதால் மட்டுமே தலைமைப் பதவிக்கு வரும் நேரு குடும்பத்தினரை விட, ஐந்து கட்சிகளில் மாறி மாறிப் பயணம் செய்திருந்தாலும் கடின உழைப்பால் மாநிலத் தலைவராக உயர்ந்திருக்கும் செல்வப்பெருந்தகை பெருமைக்குரியவர்.
பிரதமர் பதவியில் இருந்த இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் கட்சியிலிருந்து அவரை காமராஜர் நீக்கினார். கடைசிவரை இந்திரா காந்தியை காமராஜர் ஏற்றுக்கொள்ளவில்லை.
நெருக்கடி நிலையை அறிமுகப்படுத்தியதால் தேர்தலில் தோற்றவர் இந்திரா காந்தி. நேரு மட்டுமே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என வரலாற்றில் எழுதிவைத்துள்ள காங்கிரஸுக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு என்ன என்பது எப்படி தெரியும்?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.