‘கோவையில் அண்ணாமலை ஜெயிக்கமாட்டாரா?’-விரக்தியில் ஆள்காட்டி கைவிரலை துண்டித்துக் கொண்ட பாஜக நிர்வாகி!

“நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம். இதற்கிடையே, வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறியதால், கோபமடைந்து விரலை வெட்டிக்கொண்டேன். ஒரு விரல் புரட்சிக்காக எனது விரலை துண்டித்துள்ளேன்”
ராமலிங்கம்
ராமலிங்கம்புதியதலைமுறை
Published on

செய்தியாளர் - சுதீஷ்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துறை ராமலிங்கம். அப்பகுதியில், பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நாளைய தினம் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்ட 10 நாட்கள் முன்பாகவே, கோவை சென்றார் ராமலிங்கம்.

அப்போது, அண்ணாமலை உட்பட நிர்வாகிகளோடு இணைந்து கோவையில் பல இடங்களில் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று மாலையோடு பரப்புரை ஓய்ந்ததையடுத்து, தனது பிரசாரத்தையும் முடித்துக்கொண்டார். கோவை மசக்காளிபாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரத்தை நிறைவு செய்யும்போது, பொதுமக்களில் ஒருவர் அண்ணாமலை வெற்றி பெற மாட்டார் எனக் கூறியதாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த ராமலிங்கமோ கோவை பகுதியில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கையின் ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராமலிங்கம்
தஞ்சை : மனைவியை மிரட்டுவதற்காக மகளின் கையை பிளேடால் அறுத்த கொடூர தந்தை; வெளியான அதிர்ச்சி வீடியோ!

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவாரே பேட்டி கொடுத்த அவர், “அண்ணாமலைக்கு கோவையில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. பரப்புரையின்போது, அங்கிருந்தவர் ஒருவர் அண்ணாமலை வெற்றிபெற மாட்டார் என்று கூறிவிட்டார். நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம்.

இதற்கிடையே, வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறியதால், கோபமடைந்து விரலை வெட்டிக்கொண்டேன். ஒரு விரல் புரட்சிக்காக எனது விரலை துண்டித்துள்ளேன். தமிழகத்தில் பல இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ராமலிங்கம்
பாஜகவுக்கு 1 வாக்கு அளித்தால் 2 வாக்குகள் பதிவாகிறதா? கேரள மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி புகார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com