லடாக் எல்லையில் சீன ஊடுவருல் குறித்த உண்மையைக் கூறாமல் பாஜக அரசு ஓடி ஒளிந்துகொள்வதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்குக் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலில் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி உட்படக் காங்கிரஸ் கட்சியினர் பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் ஆட்சியில் ஒரு வீரரின் உயிரையோ அல்லது ஒரு அங்குல இடத்தையோ இழக்கவில்லை என்றார்.
அத்துடன், “மன்மோகன் சிங் இருந்தபோது 600 முறை இந்திய எல்லையில் ஊடுருவல் நிகழ்ந்தது. இன்றைக்கு மோடி இருக்கின்றபோது 2,263 முறை ஊடுருவல் நடந்திருக்கிறது. இது அதிகாரப்பூர்வமான செய்தி. இதற்கு ஜே.பி.நட்டா என்ன ? சொல்கிறார், மோடி என்ன சொல்கிறார் ?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், லடாக் எல்லையில் சீன ஊடுவருல் குறித்த உண்மையைக் கூறாமல் பாஜக அரசு ஓடி ஒளிந்துகொள்வதாக விமர்சித்தார்.