``மின் பற்றாக்குறையை திமுக செயற்கையாக ஏற்படுத்தியுள்ளது” - அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு

``மின் பற்றாக்குறையை திமுக செயற்கையாக ஏற்படுத்தியுள்ளது” - அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
``மின் பற்றாக்குறையை திமுக செயற்கையாக ஏற்படுத்தியுள்ளது” - அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
Published on

கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பேசினார்.

இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கணிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சாரத் தட்டுப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடும் அடங்கும் என்பதே கவலைக்குரிய உண்மை. அண்மைக் காலமாக தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு மக்களை புழுக்கத்தில் தள்ளி இருக்கிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், குருவித்துறை, மேலக்கால், திருவேடகம், ராயபுரம், திருப்பரங்குன்றம், நிலையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வெட்டு நீடிக்கிறது. கரூர் மாவட்டத்தில் மாநகராட்சியை பகுதியை தவிர மற்ற கிராமப் புறங்களில் அய்யர்மலை, மாயனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரண்டாவது நாளாக மின்வெட்டு ஏற்பட்டதால் இரவு நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது இன்று அண்ணாமலை பேசுகையில், “இந்தியாவில் போதுமான நிலக்கரி உள்ளது. மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும் நிலக்கரியை குறைவாக கொடுப்பதில்லை. பாஜக ஆட்சியில் 37% நிலக்கரி உற்பத்தி அதிகப்படுத்த படிருக்கிறது. அப்படி இருந்தும் தமிழகத்தில் மட்டும் நிலக்கரி பற்றாக்குறை என கூறுவது வினோதமாக உள்ளது. தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அமைச்சர்கள் பணம் சம்பாதிக்கவே TANGEDCO-வை பயன்படுத்துகிறார்கள். காமதேனு போன்ற TANGEDCO-வை எந்த ஆட்சி வந்தாலும் அந்த அமைச்சர்கள் பணம் சம்பாதிக்கவே பயன்படுத்தி கொள்கிறார்கள்.

2006 இல் இருந்து TANGEDCO தொடர்பாக வெள்ளை அறிக்கை பெற வேண்டும். சொல்லப்போனால் இந்தியாவில் 2.2 லட்சம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. அந்தவகையில் தனியார் சந்தையில் கமிஷன் அடிக்கவே அமைச்சர்கள் செயற்கையாக மின் பற்றாகுறையை திமுக ஏற்படுத்துகிறது. தமிழக மக்கள் திமுக ஆட்சி காலத்தில் UPS, ஜெனெரேட்டர், 2023 க்குள் power station-யையே தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com