ஆன்லைன் மூலமாகவே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெற முடியும் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வருவாய்த்துறை, மாநகராட்சி அலுவலகம், பஞ்சாயத்து உள்ளிட்டவை மூலம் வழங்கப்பட்டு வந்தன. இதற்காக சிஆர்எஸ் என்ற மென்பொருளை அனைத்து அலுலகங்களிலும் பொதுவாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சேவை வழங்குவதற்காக தனியாக பிக்மி என்ற மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்குத் தேவையான அரசின் சலுகைகள் கிடைக்க வழிவகுத்தன.
இந்நிலையில், ஏற்கனவே பயன்படுத்தி வந்த பிறப்பு இறப்பு பதிவிற்கான மென்பொருளோடு, கர்ப்பிணிகளைக் கணக்கிடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டு மென்பொருளையும் ஒருங்கிணைக்கப்பட்டதை பொதுவானதாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.