கேரளாவில் பறவைக்காய்ச்சல்: தமிழக எல்லையில் உஷார் நிலை!

கேரளாவில் பறவைக்காய்ச்சல்: தமிழக எல்லையில் உஷார் நிலை!
கேரளாவில் பறவைக்காய்ச்சல்: தமிழக எல்லையில் உஷார் நிலை!
Published on

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில் தமிழகத்தில் கோழிப் பண்ணைகளை கண்காணிக்குமாறு கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் இறந்து மடிந்த வாத்துகளில் இருந்து எட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் அவற்றில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜூ தெரிவித்தார். இது குறித்து கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு கால்நடைத்துறை செயலாளர் ஞானசேகரன் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக எல்லையோர மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கோழி, முட்டை, இறைச்சி மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி முதல் நீலகிரி வரையுள்ள எல்லையோர மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைளை பார்வையிட்டு தொற்று அறிகுறி இருந்தால் உடனே தகவல் தர வேண்டும் என்றும், கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவலை தடுக்க குறிப்பிட்ட சில பகுதிகளில் கோழி, வாத்து உள்ளிட்டவைகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஹரியானா, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் பரவி ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com