ஆந்திரா, கர்நாடகாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் வராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயக வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், ”காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதேப்போன்று பறவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கால்நடைத்துறையினருடன் இணைந்து கண்காணிக்க வேண்டும். 5 மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து சுகாதார பணியாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.