காஞ்சி ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாறு

காஞ்சி ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாறு
காஞ்சி ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாறு
Published on

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி 1935ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ் ஜயர். இவர் தனது 19 வயதில் 1954ம் ஆண்டு மார்ச் 22-இல் காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதியானார். 1994ல் காஞ்சி மடத்தின் 69-வது பீடாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். புரோகிதத் தன்மை, ஆழ்ந்த புலமையால் இந்து சமயத்தினரிடையே செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் 2005ம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயேந்திரரை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு விடுவித்தது. கடந்த சில தினங்களாக  அவர்  உடல்நலக்குறைவுடன் காணப்பட்டார். மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் தனது 83வது வயதில் இன்று காலமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com