‘பிகில்’ கதை யாருடையது?: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்

‘பிகில்’ கதை யாருடையது?: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்
‘பிகில்’ கதை யாருடையது?: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்
Published on

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

‘பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, உதவி இயக்குநர் கே.பி செல்வா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அப்படத்திற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், விளம்பர நோக்கத்திற்காகவும் பணம் பறிக்கும் வகையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இயக்குநர் அட்லி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் ‘பிகில்’ திரைப்படத்திற்கு தடைகோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com