பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநர், தயாரிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை தூக்கியெறிந்து அவமதித்ததாகக் கூறி, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவைத் தலைவர் குகேஷ், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் அடுத்த மாதம் 6ஆம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள காயத்ரி ரகுராம், ‘சேரி பிஹேவியர்’ என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் எளிய மக்களை அவதூறாக பேசியதாகக் கூறி 100 கோடி ரூபாய் கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் நாதஸ்வரத்தை அவமதித்தாக பிக்பாஸ் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.