EXCLUSIVE| “நாம் தமிழர் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்தால்..”- மக்கள் ஐக்கிய கட்சி மாநில தலைவர் பேட்டி

“கரும்பு விவசாயி சின்னத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம்” - நாம் தமிழர் வைத்திருந்த விவசாயி சின்னத்தை பெற்றுள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பேட்டி.
ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - ரமேஷ்

நாம் தமிழர் கட்சி வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள 40 மக்களவை தொகுதிகளிலிலும் போட்டியிடப் போவதாக அச்சின்னத்தை பெற்றுள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார்
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார்

இது குறித்து அவர் நம்மிடையே தெரிவிக்கையில், “நாம் தமிழர் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்தால் அந்த வேட்பாளர்களுக்கு நாங்கள் விவசாய சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம். நாங்கள் முறைப்படி 11 மாநிலங்களில் இந்த சின்னத்தை கேட்டு முன்கூட்டியே விண்ணப்பித்த காரணத்தால்தான் எங்களுக்கு அது கிடைத்தது.

ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சின்னம் கிடைப்பதில் சிக்கல்... நாம் தமிழர் கட்சி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சீமான் சொல்வது போல் நாங்கள் சதி செய்து இதை பெறவில்லை. முறையான ஆவணங்களை வைத்து தேசிய கட்சி என்ற அளவிற்கு நாங்கள் ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து சான்றிதழ் பெற்றுள்ளோம்.

பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார்
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார்

எங்களுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து சீமான் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டிடுவேன். 40 தொகுதிகளிலும் சின்னத்தை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். கடந்த காலங்களில் எங்களது கட்சிக்கு குறைவான வாக்குகள்தான் பெற்றுள்ளோம். ஆனால் வரும் காலங்களில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com