முன்பு 28.2%, பின்பு 79.6%... - தமிழகத்தில் கொரோனாவால் கருகும் நாளைய தலைமுறையின் கனவுகள்!

முன்பு 28.2%, பின்பு 79.6%... - தமிழகத்தில் கொரோனாவால் கருகும் நாளைய தலைமுறையின் கனவுகள்!
முன்பு 28.2%, பின்பு 79.6%... - தமிழகத்தில் கொரோனாவால் கருகும் நாளைய தலைமுறையின் கனவுகள்!
Published on

கொரோனா பெருந்தொற்று காலத்தில், தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 79% குழந்தைகள், குழந்தைத்தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ள அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இன்று குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், கள யதார்த்தத்தை உணர்த்துகிறது இந்தத் தொகுப்பு...

வகுப்பறையில் அமர வேண்டிய குழந்தைகள் பட்டறைகளில் வேலை பார்க்கிறார்கள். பேனா பிடித்து எழுத வேண்டிய கைகள் பீடி சுற்றுகின்றன. சத்துணவு உண்டு கல்வி கற்ற பிள்ளைகள், உணவுக்காக குடும்பத் தொழில் செய்கிறார்கள். கொரோனா தொற்று உயிர்களை மட்டும் மாய்க்கவில்லை நாளைய தலைமுறைகளின் கனவையும் மாய்த்து வருகிறது.

கடந்த ஒரு வருடமாக கல்வி சாலைகள் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில், குழந்தைகளின் கற்றல் திறன் குறைந்து, இடை நிற்றல் அதிகரித்து வருகிறது. குடும்ப வறுமையால் குழந்தைகள் பலர் வேலைக்குச் செல்ல வற்புறுத்தப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் 90 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகியுள்ளதாக கூறுகிறது யுனிசெஃப். தமிழகத்திலும் கொரோனா பாதிப்பால் 79% வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்பட்டிருப்பது CACL அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பின்தங்கிய 24 மாவட்டங்களில் குடிசை பகுதியில் வாழும், வெவ்வேறு பகுதியை சேர்ந்த 818 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 32% குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு செல்வதாகவும், 68% குழந்தைகள் குடும்ப வறுமையால் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 28.2% என இருந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை, கொரோனாவுக்கு பின்பு 79.6% என முன்பு மடங்கு அதிகரித்துள்ளது.

3 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் வீட்டிற்குள்ளே செய்யும் குடிசைத் தொழிலில் அதிகம் ஈடுபடுத்த படுவதால், 18 வயது நிரம்பியவர்களும் குழந்தைகள் என அறிவிக்க வேண்டும் என்கிறார் குழந்தைகள் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ரேணுகா. கடந்த 30 வருடங்களில் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த 2 வருடங்களில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com