தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையராக பீலா ராஜேஷ் இன்று நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வணிகவரித்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 21 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மட்டுமன்றி, கூடுதலாக சிலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவராக பீலா ராஜேஷ் கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, முதன்முறையாக முக்கிய துறைகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது மிகப் பெரிய அளவிலான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருக்கும் முக்கியமான சில தகவலகள்:
விக்ரம் கபூர், மங்கத் ராம் ஷர்மா, விபு நாயர், ஜெயஷ்ரீ ரகுநாதன், பீலா ராஜேஷ், சிகி தாமஸ் வைத்தியன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, வேறு பணியில் அமர்த்தப்படுவர். அதன்படி,
பீலா ராஜேஷ், முன்னராக கொரோனா முதல் அலையின் தொடக்க நேரத்தில் சுகாதாரத்துறை செயலராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.