பி.இ. தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 10 பேர் 200க்கு 200

பி.இ. தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 10 பேர் 200க்கு 200
பி.இ. தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 10 பேர் 200க்கு 200
Published on


 
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து பேர் 200க்கு 200 என கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

பொறியியல் படிப்புகளுக்கான‌ தரவரிசைப் பட்டியலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். கலந்தாய்விற்கான தர‌வரிசைப் பட்டியலில் கீர்த்தனா ரவி என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். பொறியியல் படிப்புகளில் சேர இந்த ஆண்டு 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 1,76,865 இடங்கள் உள்ள நிலையில், 1,04,453 பேருக்கு த‌ரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இந்த ஆண்டு 509 கல்லூரிகள் பங்கேற்கும் எனவும் மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தை அணுகி கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் கேட்கப்படும் என்று‌ம் தரவரிசைப் பட்டியலில் தவறு இருப்பின் திருத்திக் கொள்ள ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com