ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்
Published on

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

 சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக STRUCTURE உடன் கூடிய பேட்டரி கார் வசதி பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக கொரோனோ வார்டு இருக்கக்கூடிய மருத்துவமனை கட்டடத்தில் சாய்தள பாதை அமைக்கப்பட்டு பேட்டரி கார் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்த பேட்டரி கார் வசதியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை அறிமுகப்படுத்த உள்ளார். முன்னதாக 4 பேட்டரி கார்கள் மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளது. இந்த 4 கார்களும் பொது நோயாளிகளின் பயன்பாட்டிற்கு உள்ளதால், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

இந்தக் கார் அறிமுகம் செய்த பின் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல மிகுந்த உதவிகரமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com