‘திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிகாரம்’- எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்றது வங்கிகள்
அதிமுகவின் வங்கிக் கணக்குகளை கையாள புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முழு அதிகாரம் உள்ளது என்ற இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது வங்கிகள்.
வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கு திண்டுக்கல் சீனிவாசனுக்கு முழு அதிகாரம் உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி வங்கிகளுக்கு கடந்த 12ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தார். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த கடிதத்துடன் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பில் கடிதம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான ஆதாரம் இல்லை என்றும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட்டு காசோலைகள் கணக்குகளை கையாள அனுமதி அளித்துள்ளது வங்கிகள்.
அதிமுகவின் வங்கிக் கணக்குகள் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கரூர் வைசியா வங்கிகளில் உள்ளது. இதில் இரண்டு வங்கிகளும் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக கணக்குகளை கையாள்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதையும் படிக்கலாம்: அதிமுக அலுவலக கலவர வழக்கு: இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்