சாயல்குடியில், குப்பைகளை கொட்டுவதற்காக மயானத்தில் உடல்களை புதைக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் சாயல்குடி பேரூராட்சியில் அனைத்து சமூக மக்களுக்காகவும் பொதுமயானம் உள்ளது. ஆனால், சமீப நாட்களாக மயானத்தில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருகிறது. அதனால், இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல், இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசனை தொடர்பு கொண்டு கேட்டபோது இனி மயானத்தில் குப்பைகள் கொட்டாமல் கண்காணிக்கப்படும் என உறுதியளித்தார்.