சந்தியா கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணன்

சந்தியா கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணன்
சந்தியா கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணன்
Published on

குப்பையில் பெண்ணின் கை‌,கால்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கைதான சினிமா இயக்குநருக்கு, பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்‌ளது. 

கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பள்ளிக்கரணை அருகே உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகளை கிளரும் போது பிளாஸ்டிக் கோணி பையில் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தன. கொலை செய்யப்பட்ட நபர் யார்..? குற்றவாளி யார்..? என்பது குறித்த அறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனாலும் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 15 நாட்களாக துப்புக் கிடைக்காமல் போலீஸ் திணறினர். 

இந்நிலையில் குப்பையில் வீசப்பட்ட கை, கால்கள், நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியா என்பவருடையது என காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பான, விசாரணையில், சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

சந்தியாவின் வலது கை, இரு கால்கள், இடுப்பு பகுதி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட நிலையில், தலை மற்றும் எஞ்சிய பாகங்கள் தேடப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,‌ சிறையிலடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்‌ளது. 

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வரும் போது மனைவி சந்தியாவை தான் கொல்லவில்லை என பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com