ஜாமீன் கோரி மகா விஷ்ணு தாக்கல் செய்த மனு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகா விஷ்ணு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மகா விஷ்ணு
மகா விஷ்ணுகோப்புப்படம்
Published on

செய்தியாளர்: V.M. சுப்பையா

சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம், நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 7-ம் தேதி கைது செய்தனர்.

மகா விஷ்ணு
மகா விஷ்ணுpt web

இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

மகா விஷ்ணு
நாமக்கல்: கன்டெய்னர் லாரியில் ரூ. 66 லட்சம்... ATM கொள்ளை பணமா? ஒருவர் என்கவுன்ட்டர்; 5 பேர் கைது!

எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்தபோது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

court order
court orderpt desk
மகா விஷ்ணு
கோயில் தொடர்பான கட்டடம்.. இடிக்க வந்த அதிகாரிகள்.. தேர் மண்டபத்திற்கு முன் சாமியாடிய பெண்கள்

இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 3-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com