அமரர் ஊர்தி இல்லாததால் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

அமரர் ஊர்தி இல்லாததால் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்
அமரர் ஊர்தி இல்லாததால் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்
Published on

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால், இறந்தவரின் உடலை உறவினர்கள் தோளில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது. இதுகுறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் மணியன்தீவு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவ‌ர், வேதாரண்யம் பகுதியில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் வேதாரண்யம் தாலுகா அரசு மருத்துவ‌னையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அங்கு அமரர் ஊர்தி இல்லாததால் நடராஜனின் உடலை கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர். வேறுவழியில்லாமல் வேதாரண்யத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணியன்தீவு கிராமத்திற்கு உடலை உறவினர்கள் தோளில் சுமந்து சென்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் குருநாதன் ஆகியோர் விளக்கம் அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சடலத்தை தோளில் சுமந்து சென்ற செய்தி நேற்று புதிய தலைமுறையில் ஒளிபரப்பான நிலையில், ஆட்சியர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com