எஸ்பி வேலுமணி மீது இரு வழக்குகள் - பின்னணி என்ன?

எஸ்பி வேலுமணி மீது இரு வழக்குகள் - பின்னணி என்ன?
எஸ்பி வேலுமணி மீது இரு வழக்குகள் - பின்னணி என்ன?
Published on

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த ஆண்டு ஒரு வழக்கு, இந்தாண்டு ஒரு வழக்கு என இரு வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது. இவ்விரு வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையில் உள்ள முக்கிய விவரங்களின் ஒப்பீட்டை தற்போது காணலாம்.

எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அப்போது அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பணிகளுக்கு விடப்பட்ட டெண்டர்கள் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருந்ததாக கூறப்பட்டிருந்தது. வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு வேலுமணி அமைச்சராக இருந்த போது அவரது சகோதரர் மற்றும் பங்குதாரர்கள் தொடர்புள்ள நிறுவனங்களின் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருந்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொடரப்பட்ட வழக்கில் வேலுமணி 2016 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 23 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், இவரது மனைவி ஹேமலதா மற்றும் பங்குதாரர்கள், நிறுவனங்கள் என 13 தரப்புகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சோதனைகள் செய்யப்பட்டு தொடரப்பட்டுள்ள வழக்கில் வேலுமணியின் சகோதரரின் மனைவி ஹேமலதா பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. எஸ்பி வேலுமணி மற்றும் அவர் தொடர்புள்ளோர்மீது தொடரப்பட்ட முந்தைய வழக்கைவிட தற்போதைய வழக்கு வலிமையானதாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com