பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ராமேஸ்வரம் பாம்பன் பாலம் மற்றும் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு தினம் இன்றாகும். இதையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாம்பன் நடுப்பாலம் மற்றும் தூக்குப்பாலத்தில் ரயில்வே போலீசார் ஆயுதம் தாங்கி பதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் அனைவரும், முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். செல்போன், எலக்ட்ரானிக் பொருட்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல போலீசார் தடை விதிக்கப்பட்டது.
இதுதவிர பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயில்நிலையம் மற்றும் காவல்நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக வந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர், ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.