மதுரையில் கண்களைக் கவரும் ’பாகுபலி’ அரங்குகள்!

மதுரையில் கண்களைக் கவரும் ’பாகுபலி’ அரங்குகள்!
மதுரையில் கண்களைக் கவரும் ’பாகுபலி’ அரங்குகள்!
Published on

மதுரை தமுக்கம் மைதானத்தில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பாகுபலி அரங்குகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர். 

பாகுபலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிரமாண்டம்தான்.  மதுரை  சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தப் திரைப்படத்தின் கதாபாத்திரங்களை செட் வடிவில் உருவாக்கி வைத்திருக்கிறது. பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ள இந்த அரங்கம், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்கள் காண்பதற்கு திறக்கப்படுகிறது. 

பாகுபலியில் வரும் மகிழ்மதி கோட்டை, படகு, அரசர் இருக்கை என படத்தில் வரும் அனைத்து முக்கிய கதாபாத்திரத்தின் சிலைகளும் இங்கு தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் மின்னும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு. இப்போது விடுமுறை கா‌லம் என்பதால் ‌பள்ளி மாணவர்கள் இந்தப் பிரமாண்ட அரங்கத்தை அதிகளவில் வந்து பார்த்து மகிழ்கின்றனர். மதுரை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இந்தப் பாகுபலி அரங்கத்தை கண்டு ரசித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com