பெரம்பலூர்: வாக்காளர் அட்டை பெயர் திருத்த முகாமில் வட்டாட்சியர் முன்னெடுத்த விழிப்புணர்வு

பெரம்பலூர்: வாக்காளர் அட்டை பெயர் திருத்த முகாமில் வட்டாட்சியர் முன்னெடுத்த விழிப்புணர்வு
பெரம்பலூர்: வாக்காளர் அட்டை பெயர் திருத்த முகாமில் வட்டாட்சியர் முன்னெடுத்த விழிப்புணர்வு
Published on

பெரம்பலூர் அருகே இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாமில் "விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைறுகிறது. இதில் ‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக வாக்காளர்கள் தேர்தல் ஆணைய படிவங்கள் வழங்கலாம். இதற்காக நவம்பர் 13 - 14 ஆகிய இரு நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்குச்சாவடி மையங்களில் முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெறும்’ என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இன்று பெரம்பலூர் அருகே நாட்டார்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. இம்முகாமில் பெயர் சேர்த்தல் படிவம்-6, பெயர் நீக்க படிவம்-7, வாக்காளர் அட்டை பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளும் படிவம்-8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யும் படிவம்-8A வழங்க வந்த நபர்களிடம் "என் ஒட்டு விற்பனைக்கு அல்ல" என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பைகளை ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் முத்துகுமரன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் ‘நம்மால் முடியும் நண்பர்கள் குழு’ இளைஞர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com