காவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி

காவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி
காவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி
Published on

ஆவடி அருகே இரட்டைக் கொலை செய்த தம்பதியினரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட தம்பதியினர் பொடிலப்பு சுரேஷ் குமார் மற்றும் பூலட்சுமி. இவர்கள் மீது ஆந்திராவில் 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்தத் தம்பதியினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு வந்துள்ளனர். ரயில் மூலம் வந்த இவர்கள் ஆவடியில் இறங்கியுள்ளனர். அங்கு ஓய்வுபெற்ற அரசு பத்திரிகையாளரான ஜகதீசன் (68) வீட்டை இவர்கள் நோட்டமிட்டுள்ளனர். வீட்டில் ஜகதீசனும் அவரது மனைவி விஷாலினியும் (61) தனியாக இருந்ததை நோட்டமிட்ட இந்தத் தம்பதியினர், அவர்களிடம் வாடகைக்கு வீடு இருக்கிறதாக என்பதைப் போல கேட்டுள்ளனர். 

இதன்பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்து இரும்பு ராடால் ஜகதீசன் மற்றும் அவரது மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு, வீட்டிலிருந்து 50 சவரன் நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு வந்து விசாரத்தனர். அங்கு இருந்த இரும்பு ராடை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுரேஷ் குமார், பூலட்சுமியை கண்டுள்ளனர். அவர்கள் இரவு நீண்ட நேரம் அங்கிருந்ததை வைத்தும், ஜகதீசன் வீட்டிலிருந்து தடயங்களை வைத்தும் அவர்கள் தான் கொலை செய்தனர் என்பதை உறுதி செய்துள்ளனர். 

தற்போது அந்தத் தம்பதியினர் ஆவடி அருகிலோ அல்லது சுற்றுவட்டாரப் பகுதிகளிலோ சுற்றித்திரியலாம் அல்லது வீடு வாடகைக்கு எடுக்க முயலலாம் என்று காவலர்கள் சந்தேகித்துள்ளனர். மேலும் வாடகைக்கு வீடு கேட்பதை போல மீண்டும் கொலை, கொள்ளையில் ஈடுபடலாம் என்றும் யூகித்துள்ளனர். 

இதனால் அந்த இருவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், மக்களை உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அந்தத் தம்பதியினரை கண்டால் உடனே காவல்துறையினர் 100 அல்லது 9444 803 562 என்ற எண்ணில் தகவல் கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். 

அவர்கள் இருவரும் தங்கள் மூன்று வயது மகனுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மூன்று வயது சிறுவனுடன் வீடு கேட்டு வரும் தம்பதியினரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு மக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அவர்கள் புகைப்படத்தில் இருப்பதைப் போலவோ அல்லது சற்று மாறுபட்ட வேடத்திலோ இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

(தகவல்கள் : தி நீயூஸ் மினிட்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com