மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அவ்வாறு திருத்தம் செய்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழகத்தில் ஆளும்கட்சியின் தொழிற்சங்கத்தை தவிர்த்து, சிஐடியூ, ஏஐடியுசி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள், கால்டாக்சி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்றும் சென்னையை பொறுத்தவரை 1½ லட்சம் ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.