கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை: வீடியோ பதிவுடன் தொடங்கியது உடற்கூராய்வு பணிகள்

கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை: வீடியோ பதிவுடன் தொடங்கியது உடற்கூராய்வு பணிகள்
கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை: வீடியோ பதிவுடன் தொடங்கியது உடற்கூராய்வு பணிகள்
Published on

கீழச்சேரி பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடற்கூராய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது எந்த இடையாறும் ஏற்படாமல் இருக்க, சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூர் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியொருவர், மப்பேடு பகுதியை அடுத்த கீழச்சேரியிலுள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் அங்குள்ள விடுதியில் தூக்கிட்ட நிலையில் சக மாணவிகள் நேற்று கண்டறியப்பட்டார். உடன் படித்த மாணவிகள் அளித்த தகவலின் பேரில் பள்ளி விடுதி காப்பாளர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து, பின் அவர்கள் மப்பேடு காவல் துறையினரிடம் தெரிவித்தனர். இவ்வழக்கை தொடக்கத்தில் காவல்துறையின் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்தனர். தடயவியல் வல்லுநர் குழுவும் ஆய்வு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் சிபிசிஐடி ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்குக்காக சென்னையில் இருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் வந்து பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்து வருகிறார்கள். மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கிருந்து கிடைத்த தகவல் அளித்த பள்ளி விடுதி காப்பாளர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், இந்த வழக்கு விசாரணை வெளிப்படை தன்மையாக நடந்து வருவதாகவும், தம்முடைய கவனத்திற்கு வந்தவுடன் இந்த வழக்கு துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகும் அவர் தெரிவித்தார்.

அப்படி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், மாணவியின் உடகுக்கு இன்று உடற்கூறாய்வு பணிகள் தொடங்கியுள்ளது. சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் கூராய்வு தொடங்கியது. திருவள்ளூர் அரசு மருத்துவமனை டீன் அரசி தலைமையிலான மருத்துவக் குழுவினரான தடயவியல் வல்லுநர்கள் நாராயண பாபு, பிரபு, வைரமாலா ஆகிய 3 மருத்துவர்கள் முன்னிலையில் நடக்கும் இந்த உடற்கூறாய்வு பணியை, வீடியோ பதிவும் செய்து வருகின்றனர். மாணவியின் பெற்றோர் தரப்பில் அவரது அண்ணன் சரவணன் முன்னிலையில் கூராய்வு நடைபெறுகிறது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடற்கூராய்வு செய்ய உள்ள நிலையில், அசம்பாதங்களை தவிர்க்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி தலைமையில் 3 எஸ்பிக்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பள்ளியிலும் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

உடற்கூராய்வு முடிந்த பின் மாணவியின் சொந்த ஊரான தெக்களூருக்கு மாணவியின் உடல் அனுப்பப்பட உள்ளதால், அங்கு வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று பள்ளியில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று 2 குழுக்கள் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com