தமிழ்நாடு
"ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாலும் சாதிக்க முடியும்.." - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் கடலூரில் இருந்து சென்னை வரை சுமார் 165 கிலோமீட்டர் கடலில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளனர்.
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிப்ரவரி 1ஆம் தேதி 14 குழந்தைகள் 165 கிலோமீட்டர் கடலில் நீந்தத் தொடங்கினர். நான்கு நாட்கள் ரிலே முறையில் நடந்த இந்த சாதனைக்கான நிறைவு விழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் மேகநாத ரெட்டி, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை பாராட்டினர்.
இதனை தொடர்ந்து ‘WORLD RECORD OF UNION' என்னும் அமைப்பு குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது. செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, மற்ற குழந்தைகளை போல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாலும் சாதனை படைக்க முடியுமென்பதற்கு இது ஒரு உதாரணம் என தெரிவித்தார்.