ஆடி 18 பண்டிகை: போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

ஆடி 18 பண்டிகை: போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
ஆடி 18 பண்டிகை: போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
Published on

ஆடி 18-ஐ முன்னிட்டு தடையை மீறி கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தை வளாகத்திற்குள் வியாபரம் செய்ய தடைசெய்யப்பட்டிருந்தும் இன்று தடையை மீறி சந்தை கூடியது. சந்தை வளாகத்திற்குள் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. ஆடி 18 வருவதையொட்டி போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்தன.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்திருந்தனர். இதன் காரணமாக ரூ.5 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து ஆடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இங்கு, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது. பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 15 கிலோ முதல் 35 கிலோ வரையிலான ஆடுகள், ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனையானது. தடையை மீறி நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com