இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சி - இருவருக்கு போலீஸ் வலை வீச்சு

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சி - இருவருக்கு போலீஸ் வலை வீச்சு
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சி - இருவருக்கு போலீஸ் வலை வீச்சு
Published on

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை விற்பதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை வண்டியூர் பிரதான சாலையில் உள்ள இந்து சமய அறநிலை துறைக்குச் சொந்தமான இடத்தினை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தனது நண்பர் தமிழ் கணேசனுக்கு சொந்தமான இடம் என்று கூறி அதனை விற்பனை செய்யவுள்ளதாக யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கூறியுள்ளார்.

இது மட்டுமன்றி இடத்தை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் வேறொரு நபருக்கு இடத்தை விற்று விட நேரிடும் எனக் கூறி , அவரிடம் முன் தொகையாக 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்று இதற்கான பத்திரப்பதிவு முழு பாக்கி தொகையை செலுத்திய பின் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல பத்திரப் பதிவு செய்யாமலும் பணத்தையும் திரும்ப தராமலும் ராமகிருஷ்ணனும் ,கணேசனும் ரமேஷை அலைக்கழித்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த ரமேஷ், அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் நடத்திய விசாரணையில் அந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com