என்.எல்.சி. விவகாரம்: 10 பேருந்துகள் மீது கல்வீச்சு.. கடலூரில் பரபரப்பு..

கடலூர் மாவட்டத்தில் 10 அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி.யின் விரிவாக்கத்துக்காக விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் கல்வீசி தாக்கியதில் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கின.

அதன் காரணமாக அப்பகுதியில் இருந்த பிற பேருந்துகளில் இருந்த பயணிகளையும் உடனடியாக இறக்கிவிட்டுவிட்டு, பேருந்தை உடனடியாக பணிமனைக்கு திரும்பும்படி உத்தரவிடப்பட்டது. அதேபோல் நேற்று இரவு 9 மணிக்கு பிறகு சில பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

என்.எல்.சி விவகாரம்: பேருந்து கண்ணாடி உடைப்பு
என்.எல்.சி விவகாரம்: பேருந்து கண்ணாடி உடைப்பு

அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே என்.எல்.சி.க்காக நிலம் எடுப்பதை கண்டித்தும், அதற்கு எதிராக போராட்டம் நடத்திய பாமகவினரை விடுவிக்கக்கோரியும் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேருந்துகள் மீது கல்வீச்சு
எதிர்ப்புகளை மீறி கையகப்படுத்தப்படும் நிலங்கள்.. அரசு அதிகாரிகள், என்.எல்.சி. நிர்வாகம் சொல்வதென்ன?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com