’அழுத்தியது ரூ.200, வந்தது ரூ.500’: தாராள ஏடிஎம்-மில் குவிந்தது கூட்டம்!

’அழுத்தியது ரூ.200, வந்தது ரூ.500’: தாராள ஏடிஎம்-மில் குவிந்தது கூட்டம்!
’அழுத்தியது ரூ.200, வந்தது ரூ.500’: தாராள ஏடிஎம்-மில் குவிந்தது கூட்டம்!
Published on

ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200 தேவை என்று அழுத்தினால், ரூ.500 வந்ததை அடுத்து அந்த ஏடிஎம்-மில் மக்கள் கூட்டம் மொய்த்தது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில், ரூ.200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். உடனே அதிகமாக பணத்தை எடுத்துள்ளனர். இந்த இன்பச் செய்தி அந்தப் பகுதி முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இயந்திரத்தில் ரூ.200 பட்டனை அழுத்தி ரூ.500 ஆக எடுத்து சென்றுள்ளனர்.

இதுபற்றிய தகவல், வங்கி அதிகாரிகளுக்குச் சென்றது. அவர்கள் உடனடியாக அந்த ஏடிஎம் மையத்துக்கு வந்தனர். பின்னர் அந்த மையத்தைப் பூட்டினர். 

ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைத்திருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு 200-க்கு பதில் 500 ஆக கிடைத்துள்ளது. எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது என்பது குறித்தும், இதை வைத்தது யார் என்றும் அதற்கான இழப்பை பணம் வைத்த தனியார் நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com