ஒருநாளைக்கு முன்னதாகவே நிறைவடையும் அத்திவரதர் தரிசனம்..!

ஒருநாளைக்கு முன்னதாகவே நிறைவடையும் அத்திவரதர் தரிசனம்..!
ஒருநாளைக்கு முன்னதாகவே நிறைவடையும் அத்திவரதர் தரிசனம்..!
Published on

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை மட்டுமே அனுமதி தரப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் வைபவம் தொடங்கி 39-ஆவது நாளான வியாழக்கிழமை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பட்டு உடுத்தி, பல வண்ண மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரண்டுள்ள பக்தர்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர். விஐபி தரிசனத்திற்காக கிழக்கு கோபுர வாயிலில் தற்காலிக பாலம் அமைக்கப்படுவதால் அதிகாலை 5 மணிக்கு பதிலாக 8 மணிக்கு பொதுதரிசனம் தொடங்கியது.விஐபி மற்றும் விவிஐபி தரிசனமும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியதால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

இதற்கிடையில்,‌ அத்திவரதர்உள்ள வசந்த மண்டபத்தில் யாரையும் அமர வைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார். மேலும்,‌ அத்திவரதர் தரினம் ஒருநாளைக்கு முன்பாகவே அதாவது 16-ஆம் தேதியுடன் நிறைவுபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 71 லட்சம்‌ பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தோடு பக்தர்களை தங்க வைக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்களும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com