தீபாவளி பண்டிகையையொட்டி இன்று இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையையொட்டி, ஆடுகள், மாடுகள், கோழிகளின் விற்பனை அதிகமிருந்தது. பண்டிகையையொட்டி விலை உயர்ந்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்காக ஆடு, மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்த சந்தைகளிலும் விற்பனை அமோகமாக இருந்தது.
இந்நிலையில் மதுரையில் தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆட்டிறைச்சி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், கோழி இறைச்சி 150 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இறைச்சி விலை உயர்ந்திருந்தாலும், மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.