சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் எபனேசர். இவர் ‘ஆர்ஜி ஆம்புலன்ஸ்’ என்ற நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். நேற்று இவரது செல்போனுக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர், "அரும்பாக்கம் ரவுடி ராதாகிருஷ்ணன் வருகிற 15-ம் தேதி கோர்ட்டுக்கு வர உள்ளார். அப்போது நீ ரூ.50 ஆயிரம் எடுத்துக்கொண்டு வா. இல்லையென்றால் உன் தலை சிதறி விடும்" எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.