மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்தது அசோக் லேலண்ட்

மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்தது அசோக் லேலண்ட்
மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்தது அசோக் லேலண்ட்
Published on

மீண்டும் ஐந்து நாட்களுக்கு ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்களாக அசோக் லேலண்ட் அறிவித்துள்ளது. 

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. சென்னை எண்ணூரிலுள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை மற்றும் வேலையில்லா நாட்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் மேலும் 5 நாட்கள் ஊழியர்களுக்கு வேலை இல்லா நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசோக் லேலண்ட், “வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை தொடர்வதன் காரணமாக  நிறுவனத்தின் நலனுக்காக சில முடிவுகளை நிறுவனம் எடுத்துள்ளது. அதன்படி வரும் 28ஆம் தேதி, அக்டோபர் மாதம் 1,8,9 ஆகிய தேதிகளில் நிறுவனத்தில் வேலைகள் நடைபெறாது. அத்துடன் 30ஆம் தேதி 6ஆவது வேலையில்லா நாள் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். இந்த நாட்களில் ஊழியர்கள் யாரும் நிறுவனத்திற்கு வரவேண்டாம். இந்த நாட்களில் சம்பளம் தொடர்பாக ஊழியர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே கடந்த மாதம் 12 நாட்கள் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் வாகன விற்பனை 70 சதவிகிதம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com