அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது. அத்துடன் ஓசூரின் 1 மற்றும் 2ஆவது உற்பத்தி மையங்களை 5 நாள்கள் மூடுவதாகவும் அறிவித்துள்ளது.
ஆலைகளின் உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் கடிதமும் அனுப்பியுள்ளது. மும்பை பந்த்ரா, ராஜஸ்தானின் அல்வாரில் தலா 10 நாள்களும், உத்ராகண்ட் பந்த்நகரில் 18 நாள்களுக்கும் உற்பத்தி நிறுத்துவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. விற்பனை சரிவு தொடர்வதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.