செய்தியாளர்: மணிகண்டபிரபு
தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 31ம் தேதி நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்தபின், 104 பேர் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு எங்களிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. இது வருத்தமளிப்பதாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.