தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் ஒய்வு பெற்ற அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி தூத்துக்குடியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நாளை ஆஜராகி கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்த வாரம் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.