இலங்கையிலிருந்து மதுரை காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை திடீர்நகர் காவல் நிலையத்திற்கு இன்று மாலை இலங்கையிலிருந்து தொலைபேசியில் வாயிலாக மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் ’பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3பேர் இலங்கையிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் கடல் வழியாக கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வழியாக தமிழகத்தில் நுழைய முயல்கின்றனர்’ எனக் கூறியுள்ளார். தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்ததாக கூறி உடனடியாக போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி எண்ணின் விவரங்கள் குறித்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசி உரையாடல் குறித்து உண்மைத் தன்மையை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.