பேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடையாது - வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்

பேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடையாது - வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்
பேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடையாது - வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்
Published on

எந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு எனது மகனை குற்றவாளி என சட்டம் சொன்னதோ அதை பதிவு செய்த அதிகாரியோட குரல் இது என அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 7 பேரை விடுவிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதும், தற்போது சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அதை அனுப்பி இருந்தது.

இதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 9 ம் தேதி பல்வேறு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த போவதாக பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் அறிவித்துள்ளார். 

இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள பல்வேறு வழக்கறிஞர்களை சந்தித்து மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டு வருகிறார். இந்நிலையில், எந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு எனது மகனை குற்றவாளி என சட்டம் சொன்னதோ அதை பதிவு செய்த அதிகாரியோட குரல் இது என அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்தவர் கூறுகையில் பேரறிவாளன் எந்த கொலையை செய்ததாகவோ அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவோ எவ்வித ஆதாரங்களும் கிடையாது எனவும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் மீது கொண்ட இரக்கத்தினாலும் தமிழ் மீது கொண்ட பற்றிலும் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர்தான் பேரறிவாளன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பிறகும் ஒரு நிரபராதியின் வாழ்வை அழித்து, ரத்தத்தை குடித்து என்னத்த சாதிக்கபோறீங்க? என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com