“ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்கவே கொலை நடந்துள்ளது” - 4,892 பக்கங்களுடன் வெளியான குற்றப்பத்திரிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவதற்கு நான்கு முக்கிய முன் விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
ஆம்ஸ்ட்ராங் படுகொலைமுகநூல்
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவதற்கு நான்கு முக்கிய முன் விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 4892 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியை தடுப்பதே கொலைக்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நான்கு முக்கியமான முன் விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வத்தாமன் நில விவகாரம் தொடர்பாகவும், சம்போ செந்தில் வீடு விவகாரம் தொடர்பாக 30 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கிக் கொண்டதும், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு மற்றும் பகுஜன் சமாஜ் நிர்வாகி தென்னரசு கொலை ஆகிய நான்குமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரன் அனைவரையும் ஒருங்கிணைத்ததாக கூறப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக சொல்லப்பட்டுள்ள சம்போ செந்தில் பண உதவிகளை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன், நாகேந்திரன் போட்டுக்கொடுத்த திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | 5000 பக்கத்திற்கு மேல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை!

நாகேந்திரன் சிகிச்சைக்கு வரும்பொழுதும், நட்சத்திர விடுதியில் கூட்டம் கூடியும் கொலை செய்யத்திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களாக திட்டமிட்டு, ஆம்ஸ்ட்ராங்கை கண்காணித்து திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலையை செய்து முடிக்க 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங்
சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங்pt web

ஆற்காடு சுரேஷின் மனைவி எடுத்துக்கொண்ட சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலை செய்ய வேண்டும் என வேகப்படுத்தியுள்ளனர். முதலில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளை தொடர்ந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரணையை நடத்தியதாலேயே மற்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com