ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு| சீசிங் ராஜா என்கவுன்ட்டர் எப்படி நடந்தது? முழு விவரம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த சீசிங் ராஜா நேற்று கைதான நிலையில், வேறு ஒரு வழக்கில் அவர் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர் காவல்துறையினர். அப்போது ராஜா தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்
என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜா
என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜாpt web
Published on

கைது செய்யப்பட்டோர் யார்? யார்?

முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இதுவரை ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அருள், திருவேங்கடம், திருமலை, திருனின்றவூர் பா.ஜ.க நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி, தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி, தி.மு.க திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசன் மகன் சதீஷ், வட சென்னை பா.ஜ.க மகளிரணி துணை செயலாளர் அஞ்சலை, கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், அப்பு, நூர் விஜய் (எ) விஜயகுமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொது செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன், அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி, ராஜேஷ், கோபி, குமரன், புதூர் அப்பு என மொத்தம் 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜா
கர்நாடகா: மாநகராட்சி விளையாட்டு மைதான இரும்பு கேட் விழுந்து 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா

இந்த நிலையில் பிரபல A+ சரித்திர பதிவேடு குற்றவாளியும், ஆற்காடு சுரேஷின் நண்பருமான சீசிங் ராஜாவை கடந்த இரண்டு மாதங்களாக தேடி வந்தனர்.

சீசிங் ராஜா மீது ஆறு கொலை வழக்குகள், நான்கு ஆயுத தடை சட்ட வழக்குகள் உள்ளிட்ட 39 வழக்குகள் உள்ளது. 8 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுள்ளார்.

இவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த ராஜம்பேடு பகுதியில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்துவரும் தகவலின் பேரில் அங்கு சென்று நேற்று சீசிங் ராஜாவை 29வது நபராக கைது செய்தனர்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் வேளச்சேரியில் முதியவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கு ஒன்றிலும் சீசிங் ராஜாவை வேளச்சேரி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட சீசிங் ராஜாவை வேளச்சேரி போலீசார் விசாரணைக்காக பெற்றுள்ளனர்.

என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜா
“காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது” – என்கவுண்டர் குறித்து அமைச்சர் எல்.முருகன் கருத்து

பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி

முதியவரை துப்பாக்கியால் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கள்ள துப்பாக்கியை ரகசிய இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியதன் பேரில் அதனை பறிமுதல் செய்வதற்காக சீசிங் ராஜாவை நீலாங்கரை அடுத்த அக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது புதர் பகுதியில் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் காவல் ஆய்வாளர்கள் இளங்கனி மற்றும் விமல் ஆகியோரை நோக்கி சீசிங் ராஜா சுட்டதாகவும். அதனால், தற்காப்புக்காக இரண்டு ரவுண்டு சுட்டதில் சீசிங் ராஜா உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், சீசிங் ராஜா பயன்படுத்திய கள்ளத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

உடற்கூராய்வுக்காக என்கவுண்டர் செய்யப்பட்ட சீசிங்ராஜாவின் உடல் ராயப்பேட்டை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சோழிங்கநல்லூர் மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டதன் பேரில் மேஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜா
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்புடையவரென கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்! யார் இவர்?

இதுவரை ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யபட்ட நபர்களில் 25 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இதில் திருவேங்கடம் என்ற ரவுடி கடந்த ஜூலை மாதம் 14 ம் தேதி புழல் அருகே ஆயுதங்கள் பறிமுதல் செய்ய போலீசார் அழைத்து சென்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com