தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், ஐதராபாத்தின் கச்சிபௌலி என்கிற இடத்தில் நடிகை கஸ்தூரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக இருந்த கஸ்தூரியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தமிழ்நாடு காவல்துறை தேடிவந்த நிலையில், நேற்று மாலை அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்ட கஸ்தூரி இன்று சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இந்நிலையில் கஸ்தூரி கைது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கஸ்தூரி பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் கஸ்தூரி, நான் தலைமறைவாகிவிட்டதாக செய்திவெளியாகியுள்ளது. ஆனால் நான் தலைமறைவாகவில்லை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். நான் ஹைதராபாத்தில் இருப்பதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன், என் அனுமதியோடு தான் என்னை சென்னைக்கு அழைத்துவந்தார்கள் என கூறியுள்ளார்.