அனிதா மரணம் குறித்து வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழக டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நீட் தேர்வு காரணமாக, மருத்துவ கனவை பறிகொடுத்த மாணவி அனிதா கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மரணம் தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், அனிதா மரணம் குறித்து டிசம்பர் 12-ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழக டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்ட டிஎஸ்பி ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணை தலைவர் முருகன் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், அனிதா மரணத்தில் காவல்துறை வழங்கிய விசாரணை அறிக்கை தங்களுக்கு முழு மனநிறைவை அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.