அரியலூர்: ஒரே தெருவில் வசிக்கும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர்: ஒரே தெருவில் வசிக்கும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியலூர்: ஒரே தெருவில் வசிக்கும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் ஒரே தெருவை சேர்ந்த 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் 120 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஓரே தெருவை சேர்ந்த 21 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேரும் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அணைக்குடம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா கிராமம் முழுவதும் தெருக்கள் மற்றும் வீடு வீடாக டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்கானிக் மாத்திரைகளை வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com