கோடை விடுமுறையில் சம்மர் கேம்ப்கள் பாதுகாப்பானவையா? குழந்தைகள் நல ஆர்வலர்கள் சொல்வதென்ன?

“பெற்றோரின் நிர்பந்தத்தாலேயே குழந்தைகள் சம்மர் கேம்ப்களுக்குச் செல்கின்றனர். சம்மர் கேம்ப்கள் நடத்த பள்ளிக்கல்வித்துறையிடம் அனுமதி பெற வேண்டும்”
சம்மர் கேம்ப்
சம்மர் கேம்ப்PT
Published on

கோடை விடுமுறை விட்டால் போதும், அந்த பயிற்சி அளிக்கிறோம், இந்த பயிற்சி அளிக்கிறோம் என சிறார்களை
குறிவைத்து அழைப்புகள் அதிகரித்துவிடும். அப்படி புற்றீசல்கள் போல தொடங்கப்படும் சம்மர் கேம்ப்-கள் எனப்படும் பயிற்சி மையங்கள் அனைத்தும் பாதுகாப்பானவையா?

குழந்தை நலம்
குழந்தை நலம்

அவற்றை தொடங்க என்னென்ன விதிமுறைகள் உள்ளன? உண்மையிலேயே இந்த சம்மர் கேம்ப்புகளை குழந்தைகள் விரும்புகின்றனரா? உங்களின் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் இதோ...

இதுபற்றி குழந்தை நல ஆர்வலர் தேவநேயன் நம்மிடம் பேசுகையில், “பெற்றோரின் நிர்பந்தத்தாலேயே குழந்தைகள் சம்மர் கேம்ப்களுக்கு செல்கின்றனர். சம்மர் கேம்ப்கள் நடத்த
பள்ளிக்கல்வித்துறையிடம் அனுமதி பெற வேண்டும். கட்டாயக் கல்வி சட்டத்தின்படி பள்ளிகளை பிற பணிகளுக்கு
பயன்படுத்தக் கூடாது. அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, இதுபோன்ற சம்மர் கேம்ப்களை ஒழுங்கப்படுத்த வேண்டும்” என்கிறார்.

தேவநேயன்
தேவநேயன்PT

தனியார் சம்மர் கேம்ப் நிறுவனர் முத்தாயி பேசுகையில், “எங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். சம்மர் கேம்ப்களின் நன்மைகள் தெரிந்த பின்னரே தொடங்கினோம். சம்மர் கேம்ப்களில் குழந்தைகளுக்கு பல விஷயங்கள்
கற்றுக்கொடுக்கப்படுகின்றன” என்றார்.

சம்மர் கேம்ப்
“இலக்குகளை அடைய மதிப்பெண்கள்தான் முக்கியம், முகத்தில் இருக்கும் முடியல்ல” - உ.பி மாணவி பளிச் பதிலடி!

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சந்திரசேகர் பேசுகையில், "365 நாட்களில் 220 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படுகின்றன. கோடை விடுமுறையில்
குழந்தைகளுக்கு உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி செயல்படும் நாட்களில் உளவியல் பயிற்சி வழங்க முடியாது. அதற்கு இதுபோன்ற சம்மர் வகுப்புகள் உதவும்" என்றார்.

இதுகுறித்து விரிவான தகவல்களை தெரிந்துக்கொள்ள, கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com