தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் அந்தப் பொறுப்பில் இருந்துவந்த சத்யபிரதா சாஹூ, கால்நடை துறை செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய தலைமை தேர்தல் அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
2002ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக், நீலகிரி மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலைத்துறை இயக்குனர், டான்சி மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
சிறு குறு நடுத்தர தொழில்துறை செயலாளராக இருந்த அர்ச்சனா பட்நாயக், தற்போது தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள நிலையில், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.