டிஜிட்டல் ஆகிறது தமிழக அரசு கேபிள் - என்ன மாற்றங்கள் வரும்?

டிஜிட்டல் ஆகிறது தமிழக அரசு கேபிள் - என்ன மாற்றங்கள் வரும்?
டிஜிட்டல் ஆகிறது தமிழக அரசு கேபிள் - என்ன மாற்றங்கள் வரும்?
Published on

அரசி கேபிள் டி.வி கார்ப்பரேஷன் டிஜிட்டல் மயமாக்கப்படுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் பழைய அனலாக் முறை மூலம் வழங்கப்பட்டு வந்த அரசு கேபிள் சேவை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும்.

அனலாக் டிவியில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு வரும் சிக்னல்கள் ஒயர் மூலம் தொலைக்காட்சிக்கு அனுப்பப்படுவதால், சில சமயம் அவை சரியாக தெரிவதில்லை. ஆனால், டிஜிட்டல் முறையில் ஒளிப்பரப்படும் காட்சிகள் பைனரி பிட்களாக மாற்றப்படும். பின் செட்-டாப் பாக்ஸ் மூலம் டீகோட் செய்யப்பட்டு திரையில் வரும். இதனால் காட்சிகள் தெளிவாக இருக்கும். பொதுவாக டிஜிட்டல் மயமாக்கப்படும் போது, கட்டணம் உயரும். ஆனால் தமிழக அரசு நிறுவனம் இந்த சேவையை வழங்குவதால் கட்டணம் குறைவாகவே இருக்கும் என தெரிகிறது.

அரசு கேபிள் டிஜிட்டல் ஆக்கப்படுவது மூலம் மேம்பட்ட காட்சி மற்றும் ஒலி தரம், நிறைய சேனல்கள், விளையாட்டு ஆகியவற்றை செட்-டாப் பாக்ஸ் மூலம் பெற முடியும். மேலும், எந்த சேனல்கள் வேண்டும் என தேர்ந்தெடுத்து அதற்கான பணத்தை மட்டும் கட்டலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே மாநில அரசால் நடத்தப்படும் ஒரு கேபிள் நிறுவனத்திற்கு DAS உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com